10% இடஒதுக்கீடு தீர்ப்பு: தமிழக அரசு எடுத்த அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

10% இடஒதுக்கீடு தீர்ப்பு: தமிழக அரசு எடுத்த அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
Published on
Updated on
1 min read

10% இட ஒதுக்கீடு தொடர்பாக வரும் 12-ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்:

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு  வழங்கும் அரசியல் சட்ட திருத்தம் செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு கட்சியினரும் அறிக்கை வெளியிட்டனர்.

அறிக்கை விட்ட முதலமைச்சர்:

அந்த வகையில், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10%இடஒதுக்கீட்டு முறை, சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமைவதோடு, சமூக நீதிக் கொள்கைக்கு மாறானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து  தெரிவித்திருந்தார்.

அனைத்து கட்சி கூட்டம் அறிவிப்பு:

இந்த நிலையில் 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக  மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் விவாதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

அதன்படி, வரும் நவம்பர் 12-ம் தேதி சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சட்டமன்ற கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ள இந்த கூட்டத்தில் 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற கட்சியின் சார்பில் 2 பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com