தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக டி.ஆர்.பி.ராஜா நியமனம்!!

தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக டி.ஆர்.பி.ராஜா நியமனம்!!

திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக எம்.எல். ஏ. டி.ஆர்.பி.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையில் முக்கியத்துவம் வாய்ந்த துறையான நிதித்துறை அமைச்சர் பொறுப்பை பழனிவேல் தியாகராஜன் வகித்து வருகிறார். அதோடு சேர்த்து இவர் திமுகவின் முக்கியத்துவம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் பொறுப்பிலும் இருந்தார்.

இந்த நிலையில், அவர் அரசுப் பணிகளில் முழு கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் அந்த பொறுப்பிலிருந்து விலகுவதாக முதலமைச்சரிடம் கடிதம் வழங்கினார். இதனையடுத்து அவருக்கு பதிலாக எம்.எல். ஏ. டி.ஆர்.பி.ராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், டி.ஆர்.பி.ராஜா வகித்து வந்த அயலக அணி செயலாளர் பதவிக்கு மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.