பிரதமருக்குபாதுகாப்பு சரியில்லை என்றால்...டெல்லியின் பாதுகாப்பு சரி இல்லை என்று கூறுகிறார்களா?

பிரதமருக்கு பாதுகாப்பு சரியில்லை என்று சொல்கிறார்கள் என்றால் டெல்லியில் இருக்கும் பிரதமரின் பாதுகாப்பு சரி இல்லை என்று கூறுகிறார்களா என்று தெரியவில்லை? என அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு டிகேஎஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை வந்த பிரதமர் மோடி:
சென்னை மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை மாதம் கோலாகலமாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவை தொடங்கி வைப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை புரிந்திருந்தார்.
குற்றம் சாட்டிய அண்ணாமலை:
இந்நிலையில், கடந்த நவம்பர் 29 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, கடந்த ஜூலை மாதம் செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோது, அவருக்குப் பாதுகாப்பு தரவேண்டிய பணியில் இருந்து மாநில அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார். பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த மெட்டல் டிடெக்டர் கருவிகள் வேலை செய்யவில்லை எனவும், காவல் துறையினர் பழுதடைந்த கருவிகளையே பெயருக்காக வைத்திருந்தனர் எனவும் உரிய ஆதாரத்தின் அடிப்படையில், ஆளுநரிடம் இதை குற்றச்சாட்டாகத் தெரிவித்திருப்பதாக அண்ணாமலை கூறினார்.
பதிலளித்த டிஜிபி:
இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிரதமர் வருகையின்போது, பாதுகாப்பில் குளறுபடிகள் நடந்ததாக எந்தவிதமான தகவலும் இல்லை. நல்ல முறையில் பாதுகாப்பு இருந்தது. அதுதொடர்பாக எந்த தகவல் பரிமாற்றங்களும் கிடையாது. தற்போது இருப்பதிலேயே தமிழக காவல்துறை வசம்தான் நல்ல தரமான உபகரணங்கள் இருப்பதாக தெரிவித்த அவர், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சொல்வது தவறான குற்றச்சாட்டு என்று தெரிவித்தார்.
அறிக்கை கேட்ட ஆளுநர்:
இதைத்தொடர்ந்து, பிரதமருக்கு வழங்கிய பாதுகாப்பு தொடர்பாக அண்ணாமலை வழங்கிய புகார் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, தலைமை செயலாளர் இறையன்புவிடம் அறிக்கை அளிக்கும்படி கேட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டி.கே.எஸ் பேட்டி:
இந்நிலையில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அதன் பிறகு திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
பிரதமரின் பாதுகாப்பு சரி இல்லையா?:
அப்போது பேசிய அவர், பிரதமர் தமிழகம் வந்துவிட்டு டெல்லி சென்று மீண்டும் தமிழகம் வர இருக்கும் நிலையில் தற்போது அவருடைய பாதுகாப்பு சரியில்லை என்று கூறுகிறார்கள்... பிரதமருக்கு பாதுகாப்பு என்றாலே, ஒரு வாரத்திற்கு முன்பாகவே டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படையினர் இங்கு வந்து பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு செல்வார்கள், அதன் பிறகு தான் பிரதமர் வருவார். இப்படி இருக்க கூடிய நிலையில், பாதுகாப்பு சரியில்லை என்று சொல்கிறார்கள் என்றால் டெல்லியில் இருக்கும் பிரதமரின் பாதுகாப்பு சரி இல்லை என்று கூறுகிறார்களா என்று தெரியவில்லை? எனவும், ஒரு வேளை பிரதமருக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது ஏதேனும் வருத்தம் இருக்கிறதா என்று தெரியவில்லை எனவும் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு டி.கே.எஸ் இளங்கோவன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
மக்களை பற்றி கவலைப்படாத முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டுதெருவில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 700 பேர் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது, திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த வித நன்மையும் கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும், 520 வாக்குறுதிகளில் ஒன்றிரண்டை நிறைவேற்றிவிட்டு எல்லாவற்றையும் நிறைவேற்றி விட்டதாக பச்சைப் பொய் சொல்லப்படுவதாகக் கூறிய அவர், இரண்டரை ஆண்டு காலத்தில் துறை வாரியாக கொள்ளையடித்ததுதான் திமுகவின் சாதனை என்று விமர்சித்தார்.
இதையும் படிக்க : 14 மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் கடிதம்!
மக்களை பற்றி கவலைப்படாத முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலின், தன் குடும்பத்தினர் நலனுக்காக மட்டுமே உழைப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், உதயநிதியை முதலமைச்சராக்க நினைக்கும் ஸ்டாலினின் எண்ணம் பலிக்காது என்று கூறிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதை ஸ்டாலினால் பொறுத்து கொள்ள முடியவில்லை என்று கூறினர். அத்துடன், சிறுபான்மை மக்களை தந்திரமாக ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களை மறந்துவிட்டார் என்றும் குற்றம்சாட்டினார்.
தஞ்சை பெரியக் கோயில் உலகப் பிரசித்தி பெற்ற கோயிலாகவும், இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது.
இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் என வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த கோயிலில் சதய விழா, நவராத்திரி கலை விழா, சித்ரா பௌர்ணமி விழா, ஆஷாட நவராத்திரி விழா, ஐப்பசி மாத அன்னாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பெரிய கோவிலுக்கு வரும் வெளிநாட்டினர், வெளி மாநில பக்தர்கள் என ஆண்களும், ஒரு சில பெண்களும் அரைக்கால் சட்டை அணிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் டிரஸ்கோடு என்ற ஆடை கட்டுப்பாட்டு அறிவிப்பு பலகையை கோயில் நுழைவாயில், காலனி பாதுகாக்கும் இடம் என இரண்டு இடங்களில் நேற்று முதல் வைக்கப்பட்டுள்ளது.
அதில் ஆண்கள் வேட்டி, சட்டை, பேண்ட் அணிந்தும் பெண்கள் புடவை, தாவணி துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் ஆகியவை அணிந்து வர வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் இனியவன் தற்போது 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இவரது வீட்டிலிருந்து சாலைக்குச் செல்லும் வழியில் உள்ள அன்னதானக் காவேரி என்ற காட்டாற்று வாய்க்கால் தூர்வாரப்பட்டது.
அப்போதிலிருந்து சாலைக்குச் செல்ல வசதி இல்லாமல் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் 10 அடிக்கும் மேலான ஆழமுள்ள வாய்க்காலில் இறங்கி ஏறி சாலைக்கு சென்று வந்துள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் தங்களுக்கு பாதை வசதி ஏற்படுத்தித் தரவில்லை என்று கூறி கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவன் இனியன் மற்றும் அவரது தந்தை செல்வம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது மழைக்காலம் தொடங்கி மழை பெய்து வருவதால், வாய்க்காலில் இறங்கி ஏறவும், வாய்க்காலின் கரையிலும் செல்வதால் மண் சரிவுறுவதோடு, நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு சேறும், சகதியுமாக இருப்பதாகக் கூறி சீலை அமைத்துத் தரும் வரை தான் பள்ளிக்கு செல்லப் போவதில்லை எனக் கூறி மாணவன் இன்று பள்ளிக்குச் செல்லவில்லை.
மேலும், வீட்டின் முகப்புப் பக்கத்தில் வாய்க்கால் கரையில் சாலை எடுத்து தராமல் இருந்த அதிகாரிகளுக்கு நன்றி எனவும், சாலை இல்லாததால் பள்ளிக்குச் செல்லவில்லை எனவும் கூறி மாணவனின் புகைப்படத்தோடு வைக்கப்பட்டுள்ள பதாகையால் கீரமங்கலம் பகுதியிலு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலில் டிசம்பர் 3-ம் தேதி உருவாகும் புயல் வடதமிழ்நாட்டை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல தலைவர் பாலசந்திரன், வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவித்தார்.
இதையும் படிக்க : 14 மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் கடிதம்!
வங்கக்கடலில் டிசம்பர் 3-ம் தேதி உருவாகும் புயல் 4 ஆம் தேதி வட தமிழகம் - ஆந்திரா இடையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 4 ஆம் தேதி அதிகாலை புயலாகவே கரையை கடக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் எனவும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
14 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த 14 கடலோர மாவட்டங்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் கடிதம் எழுதியுள்ளார்.
இதையும் படிக்க : மழை பாதிப்பு புகார்களுக்கு 15 நிமிடங்களில் தீர்வு - ஆய்வு செய்த முதலமைச்சர்!
அவர் எழுதியுள்ள கடிதத்தில், 14 கடலோர மாவட்ட மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதோடு கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்புவதை உறுதி செய்யுமாறும் பழைய கட்டடங்களை ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், நான்காயிரத்து 967 சிறப்பு நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் 121 பகுதிகளில் முகாமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.