ஆ.ராசாவுக்கு ஆதரவும் எதிர்ப்பும்..! பரபரக்கும் தமிழ்நாடு..!

ஆ.ராசாவுக்கு ஆதரவும் எதிர்ப்பும்..! பரபரக்கும் தமிழ்நாடு..!

திமுக எம்.பி.ஆ.ராசா இந்து மதத்தினர் குறித்து பேசியது சர்ச்சையான நிலையில் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் போராட்டங்கள் வெடித்து வருகிறது.

சர்ச்சை பேச்சு:

ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்.எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? என திமுக.எம்.பி.ஆ.ராசா பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அது  தேசிய தொலைக்காட்சிகளும் விவாதிக்கும் அளவிற்கு சென்றுள்ளது.

எதிர்ப்பு :

ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு பாஜக, இந்து முன்னணி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு பெண்களை ராசா இழுவுபடுத்திவிட்டதாக ஆர்ப்பாட்டமும் நடைபெறுகிறது. ஆ.ராசாவை கைது செய்ய வேண்டும், கட்சியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க:  எதிர்த்து பேசினால் கைது செய்வதுதான் திராவிடமாடல் ஆட்சியா...? அண்ணாமலை ஆவேசம்!

பெட்ரோல் குண்டு வீச்சு:

ஆ.ராசா மீது காவல் நிலையத்தில் பாஜக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவையில் நேற்று ஒரே நாளில் காலை இரண்டு இடங்களிலும், இரவு பாஜக, RSS சேர்ந்த நிர்வாகிகள் இருவரின் வீட்டின் அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பாஜவினரை மேலும் கொதிப்படைய செய்துள்ளது.

மனுதர்ம நூல் எரிப்பு:

ஆ.ராசாவுக்கு சீமான் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். ராசாவை ஆதரித்து புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்  மனுதர்ம நூல் எரிப்பு போராட்டம் நடத்தினர்.  இப்போராட்டத்துக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

அடுத்த போராட்டங்கள்:

அடுத்ததாக சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பேராசிரியர் சரஸ்வதி தலைமையில் மனுதர்ம எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது. ராமநாதபுரத்தில் மனுதர்ம நூல் எரிப்பு போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மேட்டுப்பாளையத்தில் வரும் 29-ந் தேதி பெரியார் கைத்தடி ஊர்வலம் நடத்தப்படும் என தந்தை பெரியார் திக அறிவித்துள்ளது.

அடுத்தடுத்த போராட்டங்கள், பெட்ரோல் குண்டுவீச்சுகள் என தமிழ்நாட்டில் பதற்றமான சூழல் நிலவுகிறது