மத்திய சிறைகளின் காவல் கண்காணிப்பாளர்கள் பணியிடமாற்றம்..! தமிழக அரசு அறிவிப்பு.! 

மத்திய சிறைகளின் காவல் கண்காணிப்பாளர்கள் பணியிடமாற்றம்..! தமிழக அரசு அறிவிப்பு.! 

திமுக ஆட்சிக்கு வந்ததும் முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட பல்வேறு அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது  மத்திய சிறைகளின் காவல் கண்காணிப்பாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

மதுரை மத்திய சிறை காவல் கண்காணிப்பாளராக இருந்த ஊர்மிளா, திருச்சி மத்திய சிறை காவல் கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல சேலம் மத்திய சிறை காவல் கண்காணிப்பாளராக இருந்த தமிழ் செல்வன் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சென்னை புழல் மத்திய சிறை 1-ன் காவல் கண்காணிப்பாளராக இருந்த செந்தில் குமார் சேலம் மத்திய சிறை காவல் கண்காணிப்பாளராகவும், கடலூர் மாவட்ட மத்திய சிறையின் காவல் கண்காணிப்பாளராக இருந்த நஜிலா நாகேந்திரன் புழல் மத்திய சிறை 1-ன் காவல் கண்காணிப்பாளராகவும், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் கடலூர் மத்திய சிறை காவல் கண்காணிப்பாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.