ஐந்து மாணவர்கள் தற்கொலை என்பது எங்களுக்கு பெரிய அடி - ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி

ஐந்து மாணவர்கள் தற்கொலை என்பது எங்களுக்கு பெரிய அடி - ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி

டிஜிட்டல் நுண்ணறிவு, பாதுகாப்பு வன்பொருள் மற்றும் கட்டிடக்கலைக்கான  மையத்தின் திறப்பு விழா சென்னை கிண்டியில் உள்ள ஐ ஐ டி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மத்திய மின்னணு  மற்றும் தகவல்  தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் காணொளிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டார். மேலும் ஐ ஐ டி இயக்குனர் காமகோடி மற்றும் ஏராளமான பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஏழை மாணவர்களை அச்சுறுத்தும் ஐ.ஐ.டி தொடர் மரணங்கள்! | வினவு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐ ஐ டி இயக்குனர் காமகோடி

மென்பொருள் தயாரிப்பில் சென்னை ஐ ஐ டி முக்கிய கண்டுபிடிப்புகளை கொண்டுவந்துள்ளதாகவும் 
டிஜிட்டல் நுண்ணறிவு, பாதுகாப்பு வன்பொருள் மற்றும் கட்டிடக்கலைக்கான  மையம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் நாட்டின் வளர்ச்சிக்கும் இந்த மையம் உதவியாக இருக்கும் என்றார். மேலும் ஐ ஐ டி மாணவர்களின் தொடர் தற்கொலைக்கு பதிலளித்த அவர் ஐ ஐ டி யில் மாணவர்களின்
தற்கொலைகளை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது என்றும் ஐந்து தற்கொலை என்பது எங்களுக்கு பெரிய அடி என்றார்.

மேலும் Happy for you என்ற இணையதளம் மூலம் கவுன்சலிங் வழங்கி வருகிறோம்.

சென்னை ஐஐடியில் ஆந்திர மாணவர் தற்கொலை.. விடுதி அறையில் தூக்கில் தொங்கிய  சோகம்.. என்ன காரணம்? | Andhra student who was studying B.Tech 3rd year in  IIT Chennai committed suicide ...

மேலும் படிக்க | ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட வழக்கு - தமிழக அரசு பதிலளிக்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது - நீதிமன்றம்

மாநில அரசின் உதவியுடன் மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளாத மாணவர்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்தி அவர்களது புகார்களை பதிவு செய்யலாம் என்றார். மேலும் கேட் கீப்பர் ட்ரைனிங் என்னும் பயிற்சி நடத்த தொடங்கி இருக்கிறோம்
அதில் பேரசிரியர்கள் மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கப்பட உள்ளதாகக் கூறினார்