முறையான பயிற்சியளித்து இருந்தால் தற்கொலையை தடுத்திருக்கலாம்- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

மாணவர்களுக்கு முறையான பயிற்சியளித்து இருந்தால் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார்-ரேவதி தம்பதியின் மகன் தனுஷ். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்த இவர், மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வுக்கு தயார் ஆகி வந்துள்ளார். இரண்டுமுறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த தனுஷ், 3வது முறையாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இன்று நீட் தேர்வு எழுத இருந்த அவர், தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் தனுஷின் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.

இதை தொடர்ந்து திமுக இளைஞர் அணி செயலரும் எம்எல்ஏவுமான உதயநிதி மாணவர் தனுஷின் உடலுக்கு  மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.அத்துடன் மகனை இழந்து வாடிய பெற்றோரை சந்தித்து  உதயநிதி  ஆறுதல்  தெரிவித்தார். அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,நீட்  தேர்விலிருந்து தமிழகத்திற்கு  விலக்கு அளிக்க மத்திய அரசுக்கு திமுக  தொடர் அழுத்தம் கொடுக்கும் என்றார்.