டெல்டா மாவட்டங்களில் திடீரென பெய்த கனமழை...மகிழ்ச்சியில் விவசாயிகள்!

டெல்டா மாவட்டங்களில் திடீரென பெய்த கனமழை...மகிழ்ச்சியில் விவசாயிகள்!

Published on

தமிழ்நாட்டின்  பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, கச்சனம், கட்டிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கோடைமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த இந்த மழையால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதேபோல், நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள சிக்கல், ஆழியூர், ஆவராணி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை கோடை உழவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதேபோல், மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மதியம் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த திடீர் கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். 

நெல்லையில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வள்ளியூர், தெற்கு கள்ளிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில் குளுமையான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com