நம்பியாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு.....கோவிலில் சிக்கிக் கொண்ட மக்களை கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு துறையினர்..

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள நம்பியாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக நம்பி கோவிலில் சிக்கிக் கொண்ட பொதுமக்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

நம்பியாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு.....கோவிலில் சிக்கிக் கொண்ட மக்களை கயிறு கட்டி மீட்ட  தீயணைப்பு துறையினர்..

நாங்குநேரி அருகே திருக்குறுங்குடி பகுதியில் நம்பி ஆற்றின் கரையோரம் திருமலைநம்பி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதனிடையே சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், நம்பியாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பக்தர்கள் கோவிலிலேயே தவித்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர், கோவிலில் சிக்கிக் கொண்டவர்களை கயிறு கட்டி ஒவ்வொருவராக மீட்டனர்.