பண்ணாரி சோதனை சாவடியில் கனரக வாகனங்களுக்கு திடீர் அனுமதி மறுப்பு.. லாரி ஓட்டுனர்கள் போராட்டம்!!

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனை சாவடியில் கனரக வாகனங்களுக்கு திடீர் அனுமதி மறுக்கப்பட்டதால்  நூற்றுக்கணக்கான லாரிகள் சாலையில் வரிசை கட்டி நிற்கின்றன.
பண்ணாரி சோதனை சாவடியில் கனரக வாகனங்களுக்கு திடீர் அனுமதி மறுப்பு.. லாரி ஓட்டுனர்கள் போராட்டம்!!
Published on
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள திம்மம் மலைப்பாதை  தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய பாதையாக திகழ்கிறது. இந்த சாலை வழியாக  தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலையில் இரவு நேர போக்குவரத்துக்கு  தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்பபட்டது.  இந்த வழக்கை விசாரித்த உயர்நீ்திமன்றம் இரவில் வாகனங்கள் செல்ல தடைவிதித்து  உத்தரவிட்டது.

இதை எதிர்த்து  விவசாயிகள் தொடர்ந்நத வழக்கை மீண்டும் விசாரித்த உயர்நீதிமன்றம் காய்கறிகள் ஏற்றி செல்லும் வாகனங்கள் எப்போதும் செல்லலாம் எனவும், அதே போல் உள்ளூர் கிராம மக்கள் அடையாள அட்டை காண்பித்து பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது. அதே சமயத்தில் னரக வாகனங்களுக்கு எப்போதும் அனுமதி கிடையாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
இந்நிலையில் வெளிமாநிலங்களுக்கு சென்று பத்து நாட்களுக்கு மேல் ஆகிய கனரக வாகனங்கள் காராப்பள்ளம் சோதனைச்சாவடி மற்றும் பண்ணாரி சோதனை சாவடியை கடந்தபோது அந்த வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால்  வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் லாரி ஓட்டுனர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தங்களது வாகனங்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் பண்ணாரி சோதனை சாவடிக்கு வந்த கனரக வாகனங்கள் அனைத்தும் திம்பம் மலைப் பாதையில் செல்ல அனுமதி இல்லை எனக் கூறி வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும்  ஆத்திரமடைந்த  ஓட்டுநர்  ஒருவர் தனது லாரியை சோதனை சாவடி முன்பாக நிறுத்தி எந்த வாகனங்களும் செல்ல விடமாட்டேன் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com