எச்.எல்.எல். நிறுவனம் பற்றி ஓ.பி.எஸ்.க்கு தெரியுமா..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டமான கேள்வி..?

எச்.எல்.எல். நிறுவனம் எங்கிருக்கிறது என்னு ஓ.பி.எஸ்.க்கு தெரியுமா என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

எச்.எல்.எல். நிறுவனம் பற்றி ஓ.பி.எஸ்.க்கு தெரியுமா..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டமான கேள்வி..?
உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோருவது, செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம் உள்ளிட்டவை வெறும் அறிவிப்புகளாக மட்டுமே உள்ளது என்கிற ஓ.பி.எஸ் குற்றச்சாட்டுக்கு,  செங்கல்பட்டில் எச். எல். எல்.நிறுவனம் எங்கு இருக்கிறது, என்று ஓ.பி.எஸ்க்கு தெரியுமா? என்று கேள்வி எழுப்பிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். அவ்வாறு தமிழ்நாட்டில் உள்ள தடுப்பூசி நிறுவனங்கள் குறித்து கடந்த ஆட்சியாளருக்கு தெரிந்து இருந்தால் ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் திறந்திருப்பார்கள் என்றும் சாடினார்.
 
பொது சுகாதாரத்துறை மற்றும் யுனிசெப் இணைந்து  நடத்தும் கொரொனா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஜூலை 2 முதல் 5 வரை 10 விழிப்புணர்வு வாகனம், கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் காய்கறி, மீன் மார்க்கெட் பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அங்கெல்லாம் செல்ல உள்ளது.
 
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில், கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் இருந்தாலும், தொடர்ந்து மக்களை பாதுக்காக்க வேண்டியது அரசின் கடமை என்றும், சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாகனம் மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், மக்கள் கவனத்துடன் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
 
உலகளாவிய ஒப்பந்தம் கோருவது, செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம் உள்ளிட்டவை வெறும் அறிவிப்புகளாக மட்டுமே உள்ளது என்கிற ஓ.பி.எஸ் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அமைச்சர், 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த அவர்களுக்கு செங்கல்கபட்டில் எச். எல். எல்.நிறுவனம் எங்கு இருக்கிறது, என்று ஓ.பி.எஸ்க்கு தெரியுமா? என்று கேள்வி எழுப்பினார் அமைச்சர், தமிழ்நாட்டில் உள்ள தடுப்பூசி நிறுவனங்கள் எல்லாம் ஆட்சியாளருக்கு தெரிந்து இருந்தால் 10 ஆண்டுகளில் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் திறந்திருப்பார்கள் என்றார். எனவே எந்த அரசு மக்களை வஞ்சித்தது என்பது அனைவரும் அறிவர் என்றும், அதிமுக அரசை விட அதிகமாகவே இந்த அரசு செலுத்தி தடுப்பூசிகளை செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும் செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனம் திறப்பது தொடர்பாக மத்திய அரசு யோசித்து வருவதாகவும், நல்ல பதில் வரும் என்ற அவர்,  அதுவரை ஓ.பி.எஸ்-உம் காத்திருந்தால் நன்றாக இருக்கும் என்றார்.
 
தொடர்ந்து பேசிய அவர், தஞ்சாவூர் கள்ளக்குறிச்சி, கடலூர் போன்ற நான்கு மாவட்டங்களில் 10 என்ற அளவில் தொற்று எண்ணிக்கை கூடி உள்ளது என்றும், 7 மாவட்டங்களில் ஒன்று இரண்டு என்ற எண்ணிக்கையில் அதிகரித்து வருவதாக தெரிவித்தார். எனவே அது சம்மந்தமாக துறைதுறை செயலாளர் மாவட்ட ஆட்சியரிடம் பேசி உள்ளதாகவும், சிறிய அளவில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ள மாவட்டங்களில் தொடர்ந்து கண்காணிக்கப்டும் என்ற அமைச்சர், நாளை கடலூரில் ஆய்வு நடத்த செல்ல உள்ளதாக கூறினார்.
 
மேலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் மாவட்டங்களில் தளர்வுகளை கட்டுப்படுத்துவதா, அல்லது என்ன மாதிரி நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பாகவும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தி ஒரு முடிவு எட்டப்படும் என்றார்.
 
இந்நிலையில் தமிழகத்தில் மொத்தமாக 1.56 கோடி தடுப்பூசிகள் வந்து இருக்கும் நிலையில் 1.48 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது 8 லட்சம் அளவிற்கு தடுப்பூசி கையிருப்பு உள்ளதாகவும், இதனை வைத்து இரண்டு மூன்று நாட்களுக்கு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் கூறினார்.