தமிழகத்தில் ஆசிரியர்கள், பிராமணர்கள் பாதிக்கப்படுகின்றனர்... ஆளுநருக்கு கடிதம் எழுதிய சுப்பிரமணிய சுவாமி

தமிழகத்தில், ஆசிரியர்கள் மற்றும் பூசாரிகள் குறி வைக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் அனைவரும் பிராமணர்கள். உடனே, தலைமை செயலரை அழைத்து, பிராமணர்கள் எவ்வாறு பாதிக்கப் படுகின்றனர் என, அறிக்கை கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் ஆசிரியர்கள், பிராமணர்கள் பாதிக்கப்படுகின்றனர்... ஆளுநருக்கு கடிதம் எழுதிய சுப்பிரமணிய சுவாமி

'தமிழகத்தில் பிராமணர்கள் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக, தலைமை செயலரிடம் அறிக்கை கேட்டு, உரிய நடவடிக்கை எடுங்கள் என, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது; தமிழகத்தில், தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலையை, உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். சமீபத்தில் பொறுப்பேற்ற திமுக, அரசின் ஆதரவு காரணமாக, இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிராமணர்களை குறி வைப்பதும், அவர்கள் மீது வார்த்தை தீவிரவாத தாக்குதல் நடத்துவதும், ஜெர்மனியின் அடால்ப் ஹிட்லர் தலைமையிலான நாஜி அரசின், துவக்க கால நிகழ்வை ஒத்திருக்கிறது. தமிழகத்தில், ஆசிரியர்கள் மற்றும் பூசாரிகள் குறி வைக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் அனைவரும் பிராமணர்கள்.

தமிழகத்தில் நிலவும் தற்போதைய பதட்டமான சூழல் குறித்து, நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்த பதட்டமான சூழல் ஏற்பட, திராவிட கழகம், திமுகவில் உள்ள சிலர் மற்றும் விடுதலை புலி ஆதரவாளர்கள் காரணம்.புதிய அரசு பொறுப்பேற்று, தன் பணியை துவக்கும் ஆரம்ப நிலையில், இந்த சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சட்டப்பிரிவு, 356-ஐ பயன்படுத்த வேண்டும் எனக்கூற இயலவில்லை; எனினும், இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.எனவே, தலைமை செயலரை அழைத்து, பிராமணர்கள் எவ்வாறு பாதிக்கப் படுகின்றனர் என, அறிக்கை கேட்க வேண்டும். அவரை ஆலோசித்து, அந்த அறிக்கை மீது, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை நீங்கள் எடுக்க வேண்டும் என்று இவ்வாறு, சுப்பிரமணிய சுவாமி  கூறியுள்ளார்.