சுப்பிரமணிய சுவாமி கோவில் நகைகள் மறுமதிப்பீடு செய்யும் பணி- கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் பார்வையிட்டார்  

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நகைகள் மறு மதிப்பீடு செய்யும் பணி துவங்கியது. இப்பணியை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் பார்வையிட்டார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் கடந்த 2010-ம் ஆண்டு மறு மதிப்பீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவின்பேரில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் மறு மதிப்பீடு செய்யும் பணி துவங்கியது. இந்த பணியானது தூத்துக்குடி துணை ஆணையரும், நகை சரிபார்ப்பு அலுவலருமான ரோஜாலிசுமதா தலைமையில் நடைபெற்றது. நகை மதிப்பீட்டு வல்லுநர்கள், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நகைகளை மறுமதிப்பீடு செய்தனர்.

இப்பணியை, கோவில் இணை ஆணையர்  அன்புமணி, கோவில் தக்காரும், மாலைமுரசு நாளிதழ் மற்றும் தொலைகாட்சி நிர்வாக இயக்குனருமான இரா.கண்ணன் ஆதித்தன் ஆகியோர் பார்வையிட்டனர்.