மாணவர்கள் முககவசம் அணிந்து பள்ளிக்கு செல்ல வேண்டும்- அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்

பள்ளி மாணவர்கள் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி, முககவசம் அணிந்து பள்ளிக்கு செல்ல வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார்.   

மாணவர்கள் முககவசம் அணிந்து பள்ளிக்கு செல்ல வேண்டும்- அமைச்சர் அன்பில் மகேஷ்  அறிவுறுத்தல்

ஒன்று முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு  அறிவித்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில்  பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  1 முதல் 8 வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் பற்றி ஆலோசனை நட்ததியதாக தெரிவித்தார். மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கையில் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என அமைச்சர் கூறினார். மேலும் ஒரு வகுப்பில் 20 குழந்தைகளுக்கு மேல் இருக்க கூடாது என வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். 

கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக பள்ளிகள்  திறக்கப்படாததால்  மின்சாரம் உள்ளிட்ட வையை முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

மழலையார் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை என தெரிவித்த அமைச்சர், ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்றல் குறைபாடு தொடர்பாக மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என கூறினார்.