மற்ற நாட்டு மாணவர்களும் இந்தியக் கொடியை பிடித்து கொண்டு எல்லையை கடந்து வருகிறார்கள்...அண்ணாமலை.!!

மற்ற நாட்டின் மாணவர்களும் இந்தியக் கொடியை பிடித்து கொண்டு எல்லையை கடந்து வருகிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மற்ற நாட்டு மாணவர்களும் இந்தியக் கொடியை பிடித்து கொண்டு எல்லையை கடந்து வருகிறார்கள்...அண்ணாமலை.!!

உக்ரைன் நாட்டில் இருந்து டெல்லி வந்த மாணவர்கள் 26 பேர் சென்னைக்கு வந்தனர். அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய பொது செயலாளர் சி.டி.ரவி ஆகியோர் விமான நிலையத்தில் மாணவர்களை வரவேற்றனர். அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில்,

கடைசி நபரையும் மீட்கும் வரை தொடர்ச்சியாக மத்திய அரசு மீட்பு பணி தொடரும் என்றார்.

மேலும் முறையாக விசா வாங்கி சென்ற மாணவர்களின் முழு விவரமும் மத்திய அரசிடம் இருப்பதாக கூறி அண்ணாமலை, கடைசி நபரை மீட்கும் வரை மத்திய அரசு தொடர்ந்து இந்த பணியில் இருக்கும் என தெரிவித்தார்.

மேலும் மற்ற நாடுகளைவிட மீட்புப்பணியில் மத்திய அரசு சிறப்பாக செய்து வரக்கூடிய காரணத்தினால் வேறு நாட்டு மாணவர்களும் இந்திய கொடியைப் பிடித்துக் கொண்டு உக்ரைன் எல்லையை கடப்பதாக அவர் பேசினார்.