கல்லூரி உதவிப் பேராசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் - மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்!

கல்லூரி உதவிப் பேராசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் - மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்!

பொன்னேரியில் அரசு கல்லூரி உதவிப்பேராசிரியரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவியை வீட்டிற்கு அழைத்த உதவிப் பேராசிரியர் மகேந்திரன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், வகுப்புகளைப் புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மாணவியிடம் தகாத முறையில் பேசிய உதவிப் பேராசிரியரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், கல்லூரி முதல்வரை மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மாணவர்களின் போராட்டம் காரணமாக பொன்னேரி - திருவொற்றியூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.