தந்தையின் மரண செய்தி அறியாமல் காமன்வெல்த்தில் தங்கம் வென்ற மாணவி..!

தந்தையின் மரண செய்தி அறியாமல் காமன்வெல்த்தில் தங்கம் வென்ற மாணவி..!

தந்தையின் மரண செய்தி அறியாமல் நியூசிலாந்தில் நடைபெறும்  காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் பட்டுக்கோட்டை பெண் தங்கம் வென்று சாதனை. 

காமன்வெல்த்துக்கு தேர்வு:

தற்போது நியூசிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் வலுதூக்கும் போட்டிக்கு இந்தியாவிலிருந்து கலந்து கொள்ள எட்டு நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ரவி மற்றும் லோகப்ப்ரியா பட்டுக்கோட்டை சேர்ந்தவர்கள். ரவி தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். மற்றொருவர் பட்டுக்கோட்டையை சேர்ந்த செல்வமுத்துவின் மகள் லோகப்பிரியா (22).  இவர்கள் இரண்டு பேரும், கடந்த வாரம் பட்டுக்கோட்டையிலிருந்து நியூசிலாந்து புறப்பட்டு சென்றனர். 

தங்கப்பதக்கம்:

இந்நிலையில் வியாழக்கிழமை நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் வலுதூக்கும் போட்டியில்  பெண்களுக்கான பிரிவில் லோகப் பிரியா 52 கிலோ ஜூனியர்  பிரிவில் 350 கிலோ தூக்கி தங்கம் வென்றிருக்கிறார். மாஸ்டர் ஜிம் ரவி ஆண்களுக்கான போட்டியில் 93 கிலோ மாஸ்டர் 2 பிரிவில் 490 கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார்.

இதையும் படிக்க: அந்த ஒன்னும் முக்கியம்..! மா.செக்களுக்கு முதலமைச்சர் அறிவுரை..!

தந்தை மரணம்:

லோகப் பிரியா தங்கப்பதக்கம் வென்ற நிலையில். லோகப் அவரது தந்தை செல்வமுத்து நவம்பர் 30 அன்று இரவு 8.30 மணி அளவில் நெஞ்சுவலியின் காரணமாக மரணம் அடைந்துள்ளார். இந்த தகவலை குடும்பத்தினர் நியூசிலாந்தில் இருக்கும் லோகப்பிரியாவிடமோ, அவரது பயிற்சியாளருமிடமோ தெரிவிக்கவில்லை. 

தகவல் தெரிவிப்பு:

டிசம்பர் 1 ஆம் தேதி நியூசிலாந்தின் நேரப்படி 9 மணியில் இருந்து 1 மணி வரை நடைபெற்ற  வலுதூக்கும் போட்டியில் பெண்கள் 52 கிலோ ஜூனியர் பிரிவில் லோகப் பிரியா தங்கபதக்கம் வென்றுள்ளார். இந்த தகவலை லோகப்பிரியா வாட்ஸ்அப் மூலம் இந்தியாவில் உள்ள உறவினருகளுக்கு தெரிவித்துள்ளார். அதன்பிறகு அவரது சித்தப்பா செல்வக்குமார், தந்தை இறந்த செய்தியை மாணாவிக்கு போன் செய்து தெரிவித்துள்ளார்.

கதறி அழுகை:

தகவல் அறிந்ததும் கதறி அழுத லோகப் பிரியா, தொலைபேசி மூலம் தனது உறவினர்களுடன் வீடியோ காலில் பேசியுள்ளார். தனது தாய் நாட்டிற்காக காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்ற அந்த மகிழ்ச்சியை மன ரீதியாக கொண்டாட முடியாமல் மிகுந்த சோகத்தில் உள்ளது அவரது குடும்பம்.