நீட் தேர்வு பயத்தால் மாணவர் தற்கொலை துர்திஷ்டவசமானது… மா.சு வேதனை  

நீட் தேர்வு பயத்தால் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் துர்திஷ்டவசமானது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு பயத்தால் மாணவர் தற்கொலை துர்திஷ்டவசமானது…  மா.சு வேதனை   

நீட் தேர்வு பயத்தால் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் துர்திஷ்டவசமானது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொற்று பாதிப்பு மற்றும் மெகா தடுப்பூசி முகாம் குறித்து தென்காசி மாவட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடுப்பூசி முகாம்கள் திருவிழா போல நடைபெற்று வருவதாகவும், எதிர்பார்த்ததை விட அதிகளவில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதாகவும் கூறினார்.

100 சதவீதம் தடுப்பூசி போட்ட மாநிலமாக தமிழகம் மாறும் என நம்பிக்கை தெரிவித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வு பயத்தால் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் துர்திஷ்டவசமானது எனவும்  இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெற கூடாது என்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.