வாகனம் மோதி உயிரிழந்த மாணவனின் உடல் நல்லடக்கம்.. ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி!!

சென்னையில் பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த சிறுவனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் சிறுவனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

வாகனம் மோதி உயிரிழந்த மாணவனின் உடல் நல்லடக்கம்.. ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி!!

சென்னை ஆழ்வார் திருநகரில் நேற்று பள்ளி வாகனம் மோதியதில் தீக்ஷித் என்கிற இரண்டாம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான். பள்ளியின் அலட்சியத்தால் மாணவன் உயிரிழந்ததாக சிறுவனின் பெற்றோர் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து தனியார் பள்ளி தாளாளர் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  சிறுவனின் பெற்றோர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், உடற்கூறாய்வு செய்யப்பட்ட பிறகு தீக்ஷித்தின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.  இன்று சிறுவனின் உடலுக்கு உறவினர், பொதுமக்கள் என ஏராளமானேர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சிறுவனின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வளசரவாக்கத்தில் உளள் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.