நூல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்... 3 கோடி மதிப்பிலான ஜவுளி உற்பத்தி பாதிப்பு!!

நூல் விலை உயர்வை கண்டித்து சங்கரன்கோவிலில் விசைத்தறி உரிமையாளர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தப்போராட்டம் இன்று 3வது நாளாக தொடர்கிறது. நாள் ஒன்றுக்கு ரூ.ஒரு கோடி வீதம் ரூ.3 கோடி மதிப்பிலான ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நூல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்... 3 கோடி மதிப்பிலான ஜவுளி உற்பத்தி பாதிப்பு!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக பொதுமக்களுக்கு பொருளாதாரத்தை ஈட்டும் வகையில் விசைத்தறித் தொழில் விளங்கி வருகிறது. இங்குள்ள சுமார் 5 ஆயிரம் விசைத்தறிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

தற்போது விசைத்தறித் தொழிலுக்கு முக்கிய மூலப் பொருளான நூலின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஆயிரத்து 455 ரூபாய்க்கு விற்பனையான நூலின் விலை தற்போது 2 ஆயிரத்து 385 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி மத்திய, மாநில அரசுக்கு மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இதை கண்டித்து சங்கரன்கோவிலில் உள்ள விசைத்தறிக் கூடங்களை கடந்த 18-ம் தேதி முதல்  முதல் வருகிற 30-ம் தேதி வரையில் 13 நாட்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் நகரில் உள்ள அனைத்து விசைத்தறிக் கூடங்களும் முழுமையாக அடைக்கப்பட்டுள்ள. இந்தப் போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி வீதம் 3 கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.