பள்ளியில் மாணவர்களை வேலை வாங்கினால் கடும் நடவடிக்கை...எச்சரித்த அமைச்சர்!

பள்ளியில் மாணவர்களை வேலை வாங்கினால் கடும் நடவடிக்கை...எச்சரித்த அமைச்சர்!

அரசு பள்ளியில் மாணவர்களை வேலை வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார். 


தஞ்சை சார்ந்த பிள்ளை கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தாலும் இந்த பாலம் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருப்பதோடு விபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளதால், இந்த பாலத்தை தொடக்கத்தில் திட்டமிட்டது போலவே மாற்றி அமைக்க வேண்டும் என தஞ்சை மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர் கட்சியாக இருந்தபோது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.

இதையும் படிக்க : ஈபிஎஸ் எடுத்துள்ள புதுவியூகம்...வீடு வீடாக...ஆர்.பி.உதயகுமார் சொன்ன தகவல்...!

இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது பாலத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின் பேசிய அவர், பாலத்தின் தன்மை குறித்து ஆய்வு செய்து பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், 18 மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் தெரிவித்தார். 

மேலும் அரசு பள்ளிகளில் மாணவர்களை படிக்க மட்டுமே வைக்க வேண்டும், எந்த வேலைகளையும் வாங்க கூடாது. அப்படி புகார்கள் வந்தால் பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.