தீபாவளியன்று நேர கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை  

தீபாவளி பண்டிகை அன்று நேர கட்டுப்பாடுகளை மீறி பட்டாசுகளை வெடித்தால் நிச்சயம் அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.  

சென்னை மாநகர காவல் ஆணையர்  சங்கர் ஜிவால் மாலைமுரசு தொலைக்காட்சிக்கு பிரத்தியேகப் பேட்டி அளித்துள்ளார். அதில், மாலைமுரசு தொலைக்காட்சி நேயர்களுக்கு தீபாவளி நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.  தொடர்ந்து பேசிய அவர், தீபாவளி பண்டிகை அன்று பாதுகாப்பிற்காக காவல்துறையினர் இரண்டு தளமாக பிரிக்கப்பட்டுள்ளது என்றும், சென்னையை விட்டு வெளி மாவட்டங்களுக்கு செல்கின்ற கோயம்பேடு பேருந்து நிலைய அனைத்து தளங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்படும் என்றும் குறிப்பிட்டார்.

கூட்ட நெரிசலை குறைப்பதற்காக நான்கு வகை பாதுகாப்பு போடப்படும் என்றும்,  போக்குவரத்து போலீசார்  ஆயிரத்து 500 சென்னைக்கு வெளிப்புறமாக போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்த ஆணையர், பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.