வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்...அமைச்சர் சக்கரபாணி

வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வருவதை தடுக்க திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் உள்ள சோதனை சாவடிகள் கண்காணிக்கப்படும் என  உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்...அமைச்சர் சக்கரபாணி

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நடமாடும் நெல் கொள்முதல் செய்யும் வாகனங்களை  அமைச்சர் சக்கரபாணி கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை தாமதம் இன்றி உடனடியாக கொள்முதல் செய்யவும்,கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடன் அறவைக்கு எடுத்துசெல்லவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரபதத்தை 17சதவீதத்திலிருந்து  20-சதவீதமாக உயர்த்த ஒன்றிய் அரசிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் கூறினார்.

மேலும் வெளிமாநிலம்,மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கொள்முதல் நிலையங்களுக்கு நெல் கொண்டுவருவதை தடுக்க திருவாரூர்,தஞ்சை மாவட்டங்களில் சோதனை சாவடிகள் அமைத்து லாரிகள்,வேகன்களில் வெளிமாநில நெல்வராமல் தடுக்க கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com