தொடங்கியது புதுவை கடற்கரை திருவிழா.. துணை நிலை ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்பு

புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கடற்கரையை விரிவுபடுத்த உள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

தொடங்கியது புதுவை கடற்கரை திருவிழா..  துணை நிலை ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்பு

புதுச்சேரியில் இன்று முதல் வரும் 16-ம் தேதி வரை கடற்கரை திருவிழா நடத்தப்படுகிறது.

புதுச்சேரி கடற்கரை, பாண்டி மெரினா, செண்டியூன்ஸ் கடற்கரை மற்றும் பாரடைஸ் கடற்கரையில் கலை நிகழ்ச்சிகள், மிதி வண்டி ஓட்டம், கடற்கரை விளையாட்டு, ஆடை அலங்கார காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

விழாவை துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய பேசிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி கடற்கரையை விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் புதுச்சேரியில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு மீண்டும் அரசுப் பேருந்து சேவை தொடங்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், புதுச்சேரி கடற்கரை திருவிழாவில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருகை தர உள்ளதாக கூறினார். குஜராத்தில் பட்டேலுக்கு வானுயர சிலை இருப்பதை போல புதுச்சேரியில் பாரதியாருக்கு சிலை அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.