தாய்லாந்து நாட்டிற்கு கடத்த முயன்ற நட்சத்திர ஆமைகள் பறிமுதல்...

கடல் நண்டுகள் என கூறி தாய்லாந்து நாட்டிற்கு கடத்த முயன்ற 25 லட்சம் ரூபாய் மதிப்புடைய  2,500 நட்சத்திர ஆமைகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தாய்லாந்து நாட்டிற்கு கடத்த முயன்ற நட்சத்திர ஆமைகள் பறிமுதல்...

சென்னை பழைய விமானநிலைய வளாகத்தில் உள்ள சரக்கு விமான நிலையத்தில், தாய்லாந்து நாட்டு தலைநகா் பாங்காக் செல்லும் தாய் ஏா்லைன்ஸ் என்ற சரக்கு விமானத்தில் ஏற்றுவதற்கு 15 பெட்டிகள் வந்திருந்தன. அதனுள் கடல் நண்டுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது அந்த பார்களை சுங்கத்துறை அதிகார்கள் சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தனர். அதில் உயிருடன் கூடிய நட்சத்திர ஆமைகள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

அதனைதொடர்ந்து 15 பார்சல்களையும் விமானத்தில் ஏற்றாமல் தடுத்திய நிறுத்திய அதிகாரிகள், ஒவ்வொரு பார்சலில் உள்ள கடல் ஆமைகளை எண்ண தொடங்கினர். அதன்படி 15 பார்சல்களிலும் சுமார் 2,500 நட்சத்திர ஆமைகள் இருந்தன. இதையடுத்து நட்சத்திர ஆமைகளை  பறிமுதல் செய்த அதிகாரிகள் பார்சலில் இருந்த முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டனர். அதில் அனைத்தும் போலி என்பது தெரியவந்தது.

மேலும் பாா்சல்களை சரக்கு விமானத்தில் அனுப்ப பதிவு செய்த ஏஜென்சிகளிடமும், அந்த நிறுவனத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா். இதற்கிடையில் நட்சத்திர ஆமைகளை,கடல் நண்டுகள் என்ற பெயரில் பதிவு செய்து வெளிநாட்டிற்கு கடத்தமுயன்ற கடத்தல் ஆசாமிகளையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனா்.