சகோதரி அஸ்வினிக்கு மறுக்கப்பட்டது உணவல்ல, மரியாதை... முதல்வர் ஸ்டாலின்

சகோதரி அஸ்வினிக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல; மரியாதை என்று முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

சகோதரி அஸ்வினிக்கு மறுக்கப்பட்டது உணவல்ல, மரியாதை... முதல்வர் ஸ்டாலின்

கோயில் களில் தினசரி அளி க் கப்பட்டு வரும் அன்னதானத்தில் அவமதி க் கப்படுவதா க நரி க் குறவச் சமூ கத்தைச் சேர்ந்த அஸ்வினி அளித்த பேட்டி சமூ க வலைதளத்தில் வைரலா க பரவியது. இதனைத் தொடர்ந்து மாமல்லை தலசயனப் பெருமாள் கோயில் அன்னதானத்தில் நரி க் குறவச் சமூ கத்தைச் சேர்ந்த அஸ்வினியை அரு கே அமர்த்தி, அறநிலையத் துறை அமைச்சர் பி. கே.சே கர்பாபு உணவருந்தியதற் கு பாராட்டு கள் குவிந்தன.

இதனிடையே, இன்று குறவர் மற்றும் பழங் குடியின ம க் களு க் கான 4.5 கோடி ரூபாய் நலத்திட்ட உதவி களை தமிழ க முதல்வர் மு. க.ஸ்டாலின் வழங் கினார். இந்த விழாவில் முதல்வரு க் கு ஊசிமணி மாலை அணிவித்து அஸ்வினி மரியாதை செலுத்தினார். பின்பு அங் கிருந்த ம க் களிடையே செல்ஃபி எடுத்து க் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அங் குள்ள வீடு களு க் குச் சென்று முதல்வர் மு. க.ஸ்டாலின் பார்வையிட்டார். அத்துடன் அஸ்வினி வீட்டு க் கும் சென்றார். தனது வீட்டிற் கு வந்ததிற் கு ரொம்ப நன்றி என் முதல்வரிடம் தெரிவித்தார் அஸ்வினி. அதனைத் தொடர்ந்து அங் கிருந்தவர் கள் அளித்த மனு க் களையும் முதலமைச்சர் பெற்று க் கொண்டார்.

இந்த விழா தொடர்பான பு கைப்படங் கள் மற்றும் வீடியோ க் களை தனது ட்விட்டர் ப க் கத்தில் ப கிர்ந்து கருத்து  பதிவிட்டுள்ள முதல்வர் மு. க.ஸ்டாலின், சமூ கத்தின் விளிம்பு நிலையில் இரு க் கும் ஒருவரையும் விடாமல் சுயமரியாதையும், சமூ கநீதியையும் காப்பதே திராவிட இய க் கத்தின் பணி என்றும் ச கோதரி அஸ்வினி க் கு மறு க் கப்பட்டது உணவு அல்ல; மரியாதை என்றும் நெ கிழச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரமாயிரம் ஆண்டு கள் சமூ கத்தில் புரையோடிவிட்ட அழு க் கு களை க் களைந்து, சமூ கநீதியை நிலைநாட்டி, மானுட ஒளியை க் கா க் க நாம் பயணி க் க வேண்டிய தொலைவு இன்னும் உள்ளதா கவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.