ஸ்ரீவில்லிபுத்தூர் : கோலாகலமாக நடந்த ஆண்டாள் கோவில் தேரோட்டம்..!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் :  கோலாகலமாக நடந்த ஆண்டாள் கோவில் தேரோட்டம்..!
Published on
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், நூற்றியெட்டு திவ்யதேசங்களில் ஒன்றாகும். பன்னிரெண்டு ஆழ்வார்களில்: பெரியாழ்வாரும், ஆண்டாளும் பிறந்த புண்ணியபூமி ஸ்ரீவில்லிபுத்தூராகும். இங்கு உள்ள பெரிய கோபுரம் தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்குகிறது.

மேலும், இங்கு பிரசித்தி பெற்ற ஆண்டாள்  கோவிலில், ஆண்டுதோறும் ஆண்டாள் பிறந்த  நட்சத்திரமான ஆடிப்பூரத்தன்று தேர்த்திருவிழா நடைபெறும். அது போல இந்த ஆண்டு  ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கடந்த  ஜூலை 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது, தினமும் காலை ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபத்தில் எழுந்தருளி இரவு வாகனங்களில் வீதிஉலா நடைபெற்றது. 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று தேரோட்டம், அதிகாலையில் ஏகாந்த திருமஞ்சனம் முடிந்து, பிரம்மமுகூர்த்தத்தில் திருத்தேரில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு  ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட,  பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்களப்பொருட்கள்  சாத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து காலை 9.05 மணிக்கு தேரோட்டத்தை அமைச்சர், மாவட்ட ஆட்சியர்,  தக்கார் ரவிச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். ஏராளமான  பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.   தேரோட்டத்தை முன்னிட்டு  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேரோட்டத்தைக்கான ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்களின் வசதிக்காக குடிநீர், அன்ன தானம், பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com