ஆக்கப்பூர்வ வழிகளில் கோடை விடுமுறையை செலவிடுங்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்

கோடை விடுமுறையில் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், ஆக்கப்பூர்வமான வழிகளில் விடுமுறையை செலவிட வேண்டுமென்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆக்கப்பூர்வ வழிகளில் கோடை விடுமுறையை செலவிடுங்கள் -  அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஜூன் 13 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை நாட்களில் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விடுமுறையில் நீர்நிலைகளுக்கு செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும், ஆன்லைன் விளையாட்டுகள் தவிர உடலுக்கு உரிய பயிற்சியை வழங்கும் நேரடி விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் கவனம் செலுத்திட வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.

தங்கள் குழந்தைகளுக்கு எதில் ஆர்வம் மற்றும் திறமை இருக்கிறது? என்பதை பெற்றோர்கள் அடையாளம் காணும் விடுமுறையாக, இந்த கோடை விடுமுறையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கூறியிருக்கிறார்.