தமிழ்நாட்டில் குப்பைகளை சேகாிக்க சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படும் - அமைச்சர் உறுதி

தமிழ்நாட்டில் குப்பைகளை சேகாிக்க சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படும் - அமைச்சர் உறுதி

தமிழ்நாடு முழுவதும் ”பயோ மைனிங்” முறையில் குப்பைகளை சேகரிக்க சட்டமன்றத்தில் சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படும் என அமைச்சா் மெய்யநாதன் தொிவித்துள்ளாா்.

புதுக்கோட்டையில் அரசு சாா்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மெய்யநாதன் பங்கேற்றாா். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க சேட்டிலைட் மூலம் கண்காணிக்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளதாக தொிவித்த அவா், குப்பை கிடங்கு இல்லாத தமிழ்நாடு என்ற நோக்கத்தோடு நாடு முழுவதும் ’பயோ மைனிங்’ முறையில் குப்பைகளை சேகரிக்க சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படும் எனவும் நம்பிக்கை தொிவித்துள்ளாா். 

இதையும் படிக்க : ராகுல்காந்தியே இல்லை...நாங்களும் எம்பி பதவியை ராஜினாமா செய்வோம் - திருநாவுக்கரசா்!

ஏற்கனவே, 153 இடங்களில் உள்ள குப்பை கிடங்குகள் கண்டறியப்பட்டு அவைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், தற்போது 30க்கும் மேற்பட்ட குப்பை கிடங்குகளில் பயோ மைனிங் முறைப்படி குப்பைகள் பிரித்தெடுக்கப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டு வருவதாகவும், மீதமுள்ள பகுதிகளிலும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் குப்பை கிடங்குகள் அகற்றும் பணி முடிவடைந்து குப்பை கிடங்கு இல்லாத தமிழகமாக மாற்றப்படும் என்றும் உறூதியளித்தவர், அந்த இடங்களில் காடுகள் வளர்க்கும் பணி நடைபெறும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.