தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள்.. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் நடைபெற்ற திருவிழா மற்றும் சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள்.. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

சித்திரை திருவோணத்தை முன்னிட்டு வேலூர் கோட்டையிலுள்ள நடராஜர் கோவிலில் தேன், பால், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 51 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் உள்ள நிலாவூர் கிராமத்தில் மலைவாழ் மக்களின் பாரம்பரிய திருவிழாவான கதவநாச்சியம்மன் ஆலய திருவிழா கோலாகலமாக தொடங்கியது. 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த திருவிழாவில் 14 கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று பால் ஊற்றி வழிபட்டனர். விடுமுறை என்பதால் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

இதேபோல், நாகை அருகேயுள்ள கொளப்பாடு செல்லமுத்து மாரியம்மன் கோவில்  திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.