கனமழையால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்... தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை...

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. 

கனமழையால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்... தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை...

வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்துவருகிறது. நேற்றுமுன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை பெய்த கனமழையால் சாலைகள், வீடுகளில் மழைநீர் தேங்கியுள்ளன. ஒருசில பகுதிகளில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்துள்ளதால் நோய் தோற்று பரவும் அபாயம் உள்ளது.

இதேபோல், கொசு தொல்லை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மலேரியா, டெங்கு போன்ற  நோய்கள் அதிகம் பரவ வாய்ப்புள்ளது. இதையடுத்து மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பொதுமக்களுக்கு வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக பொதுமக்களுக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்க சென்னையில் இன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாமினை, முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.

பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் பல இடங்களில் பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரவல் இருந்து வரும் நிலையில், சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட 200 வார்டுகளிலும் இன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.