அதிமுக தலைமைக்கு நன்றி தெரிவித்த எஸ்.பி.வேலுமணி.. காரணம் என்ன..? 

அதிமுக தலைமைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நன்றி தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைமைக்கு நன்றி தெரிவித்த எஸ்.பி.வேலுமணி.. காரணம் என்ன..? 

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். 

அத்துடன் அதிமுக சட்டமன்ற கொறடாவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியும், அதிமுக சட்டமன்ற குழு பொருளராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தேர்வாகினர். 

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “சட்டமன்ற கட்சி கொறடாவாக என்னை தேர்வுசெய்த கழக ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சி துணை தலைவர் அண்ணன் ஓபிஎஸ், மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி , மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

அதிமுக இன்றைய சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், கழகத்தின் சார்பில், சட்டமன்ற கட்சிக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் என் பாராட்டுகளையும், அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.