தந்தையை கம்பால் அடித்துக் கொன்ற மகன் - மரணத்தில் மர்மம் இருப்பதாக மூத்த மகன் காவலில் புகார்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் தந்தையை கம்பால் அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வில்லவிளையை சேர்ந்தவர் பூதலிங்கம். 85 வயதான இவருக்கு நான்கு ஆண் பிள்ளைகளும்,ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர்.
பூதலிங்கம் காலில் அடிபட்டு படுத்த படுக்கையாக வீட்டில் இருந்த நிலையில் திடீரென அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவரது மூத்த மகன் வேலாயுதம் தந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தல் புகார் அளித்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து தந்தையுடன் வீட்டில் இருந்த கடைசி மகன் சுப்பையாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் குடிபோதையில் தனது தந்தையை கம்பால் தாக்கி கொன்றதாக, வாக்கு மூலம் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில் அவரை கைது செய்த போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .