ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0இன் கீழ் தீவிர சோதனை.. 2,423 கஞ்சா வியாபாரிகள் அதிரடியாக கைது!

தமிழகத்தில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 மூலம் இதுவரை 2 ஆயிரத்து 423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0இன் கீழ் தீவிர சோதனை.. 2,423 கஞ்சா வியாபாரிகள் அதிரடியாக கைது!

தமிழகத்தில் கஞ்சா விற்பனையை ஒழிக்கும் பணிகளை மேற்கொள்ள படி டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டு இருந்தார். அதற்கு ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என பெயர் வைக்கப்பட்டது. இந்த ஆபரேஷன் மூலம் பல இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், கடந்த 31 நாட்களில் 2 ஆயிரத்து 423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களிடமிருந்து 3 ஆயிரத்து 562 கிலோ கஞ்சாவும், அவர்கள் பயன்படுத்திய 197 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல 6 ஆயிரத்து 319 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 44 புள்ளி 9 டன் குட்கா மற்றும் 113 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதனைதொடர்ந்து திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கஞ்சா வியாபாரிகளின்  வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையாளர்களும் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என்று காவல்துறை தலைமை இயக்குநரகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.