மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இணைப்பு சிற்றுந்து சேவை...தொடங்கி வைத்தார் உதயநிதி!

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இணைப்பு சிற்றுந்து சேவை...தொடங்கி வைத்தார் உதயநிதி!

சென்னையில் உள்ள முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு 10 இணைப்பு சிற்றுந்து சேவைகளை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். 

பெண்களுக்காக 'பிங்க்' நிற பேருந்து சேவை:

சென்னை மாநகராட்சியில் கட்டணமில்லா இலவச பேருந்தில் பயணிக்கும் பெண்கள் ஒயிட்போர்ட் என்று நினைத்து சொகுசு பேருந்தில் குழப்பம் அடைவதாக புகார் எழுந்தது. புகாரையடுத்து அவர்களின் குழப்பத்தை தவிர்க்க பெண்களுக்காக 'பிங்க்' நிற பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

'பிங்க்' நிற பேருந்து சேவை தொடக்கம்:

உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த சேவையின் முதற்கட்டமாக, 61 பிங்க் நிற பேருந்து சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள், அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பயன்பாட்டுக்கு வர உள்ளது.

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு சிற்றுந்து சேவை:

பெண்களுக்கான பிங்க் நிற பேருந்தை தொடர்ந்து, சென்னையில் உள்ள முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு 10 இணைப்பு சிற்றுந்துகளுக்கான சேவையையும்  உதயநிதி தொடங்கி வைத்தார். இந்த சிற்றுந்துகள் பேருந்து நிலையங்களில் இருந்து முக்கியமான மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, சின்னமலை மெட்ரோ- தரமணி, விமானநிலைய மெட்ரோ- தாம்பரம் மேற்கு, செனாய் நகர் மெட்ரோ- தியாகராய நகர், கிண்டி மெட்ரோ- வேளச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல இந்த இணைப்பு சிற்றுந்துகளில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.