"சேரி" குஷ்பு விவகாரம்; காங்கிரசார் மீது வழக்கு பதிவு!

"சேரி" குஷ்பு விவகாரம்; காங்கிரசார் மீது வழக்கு பதிவு!

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் பட்டியலினப் பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் உட்பட 140 காங்கிரசார் மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜகவை சேர்ந்தவருமான நடிகை குஷ்பு "சேரி மொழி" என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என கூறிய நிலையில்,  தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர் சாந்தோம் பிரதான சாலையில் இருக்கும் குஷ்பு வீட்டின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் குஷ்புவின் உருவ படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தும், துடைப்பத்தால் அடித்தும்,  முழக்கங்கள்  எழுப்பியும் ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்து பட்டினம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து பின்னர் விடுவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நடிகை குஷ்பு இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அத்துமீறி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் பட்டியலின பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் உட்பட 140 பேர் மீது பட்டினம்பாக்கம் போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், மாநகர காவல் சட்டம் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: "10 ஆண்டுகளில் யானைகளை பார்க்க முடியாது" உயர்நீதிமன்றம் வேதனை!