குழந்தைகளை கையில் ஏந்தியவாறு தூக்க நேர்ச்சை திருவிழா.. பல்லாயிரக்கணக்கானோர் விழாவில் பங்கேற்பு!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை திருவிழா  விமரிசையாக நடைபெற்றது.

குழந்தைகளை கையில் ஏந்தியவாறு தூக்க நேர்ச்சை திருவிழா.. பல்லாயிரக்கணக்கானோர் விழாவில் பங்கேற்பு!!

கொல்லங்கோடு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மீனபரணி தூக்க நேர்ச்சை திருவிழா மிக பிரசித்தி பெற்றதாகும்.

இங்கு குழந்தை வரம் வேண்டியும், குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டியும், தூக்க நேர்ச்சை வேண்டுதல் செய்தால் அது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதில் 3 மாதங்களுக்கு மேல் ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகள் மட்டுமே இந்த நேர்ச்சையில் கலந்து கொள்ள முடியும்.

இதற்காக 48 அடி உயரமுள்ள தூக்க வில்லில் முதலில்  குழந்தைகள் இன்றி தூக்கக்ககாரர்கள் 4 பேர் கோயிலை சுற்றிவரும் அம்மன் தூக்கம் நடைபெறும்.  தொடர்ந்து நடந்த தூக்க நேர்ச்சையில், கைகளில் குழந்தைகளை சுமந்தபடி கோயிலை ஒருமுறை சுற்றி வந்து, தூக்க நேர்ச்சை நிறைவு செய்கின்றனர். இந்த வருட தூக்க நேர்ச்சை இன்று காலை துவங்கியது.

முதலில் அம்மன் தூக்கம் நடைபெற்றது. இந்த ஆண்டு 1,098 குழந்தைகள் தூக்க நேர்ச்சைக்கு பதிவு செய்திருந்தனர். இந்த தூக்க நேர்ச்சை வழிபாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் கேரளாவில் இருந்தும் பல்லாயிரக்காணக்காண பக்தர்கள் பங்கேற்றனர்.  இன்று காலையில் துவங்கிய இந்த தூக்கம் நேர்ச்சை திருவிழா நாளை அதிகாலை வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தூக்கத் திருவிழாவில் கன்னியாகுமரி மாவட்டம், கேரள மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று உள்ளனர்.