இனி உண்மை தானா வெளிவரும்....சிவசங்கர் பாபாவிற்கு 15 நாள் நீதிமன்ற காவல்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிவசங்கர் பாபாவை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இனி உண்மை தானா வெளிவரும்....சிவசங்கர் பாபாவிற்கு 15 நாள் நீதிமன்ற காவல்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிவசங்கர் பாபாவை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது, போக்சோ சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில், வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சிவங்கர் பாபாவை, டெல்லியில் சிபிசிஐடி போலீசார், நேற்றுமுன்தினம் கைது செய்தனர். பின்னர், விமானம் மூலம் அவரை சென்னை அழைத்து வந்த சிபிசிஐடியினர் எழும்பூரில் அலுவலகத்தில் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.  அப்போது, பாலியல் புகார் தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், அவர் அளித்த வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்தததாகவும் கூறப்படுகிறது. இந்த விசாரணைக்கு பின்னர், சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். இதில், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்-டாப்கள், ஹார்டு டிஸ்க்குகள் உள்ளிட்ட ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, சிவங்கர் பாபாவை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. 

முன்னதாக, சிவசங்கர் பாபாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த செங்கல்பட்டு அழைத்து வந்த போது, மகளிர் அமைப்பினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.