"சீர்மிகு நெல் சாகுபடி திட்டம்".. எங்கெங்கு எவ்வளவு ஒதுக்கீடு தெரியுமா? - வேளாண் பட்ஜெட்டில் அறிவித்தது என்ன?

சீர்மிகு நெல் சாகுபடி திட்டம் 32 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

"சீர்மிகு நெல் சாகுபடி திட்டம்".. எங்கெங்கு எவ்வளவு ஒதுக்கீடு தெரியுமா? - வேளாண் பட்ஜெட்டில் அறிவித்தது என்ன?

2022-23ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். 

அப்போது பேசிய அவர், இரண்டு சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி உருவாக்கப்படும் என தெரிவித்தார்.

தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி , கரூர், திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை கொண்டு உருவாக்கப்படும் என்றார். 

விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் வழங்க 300 கோடி ரூபாயும், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு 71 கோடியும், நெல்லுக்கு பதிலாக சிறுதானியம் உள்ளிட்ட மாற்று பயிர்களை சாகுபடி செய்ய ரூபாய் 10 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் அமைக்கப்படும் எனவும்  சீர்மிகு நெல் சாகுபடி திட்டம் 32 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் எனவும், சூரியகாந்தி சாகுபடி பரப்பு உற்பத்தித்திறன் உயர்த்தப்படும் எனவும் அறிவித்தார்.

வேளாண்மை துறை மின்னணு வேளாண்மை திட்டத்தை வடிவமைத்துள்ள நிலையில், நடப்பு ஆண்டில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

இயற்கை உரங்கள் தயாரிக்கும் குழுவுக்கு 1 லட்சம் உதவியும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க  400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். 

பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு 2,339 கோடி ஒதுக்கீடும், பருத்தி உற்பத்தியை அதிகரிக்க 15 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளதாக  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.