போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த அன்புமணி...வழக்கம் போல் இயங்கும் என்று சொன்ன ஆட்சியர்!

போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த அன்புமணி...வழக்கம் போல் இயங்கும் என்று சொன்ன ஆட்சியர்!

நெய்வேலி என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து கடலூரில் நாளை முழு அடைப்புக்கு பாமக தலைவர் அன்புமணி அழைப்பு விடுத்துள்ள நிலையில், வழக்கம் போல கடைகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

நெய்வேலி என்எல்சி நிர்வாகம் சுரங்க விரிவாக்க பணிக்காக விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தி வருகிறது. இதற்கு  விவசாயிகள் உள்பட பல்வேறு  தரப்பினரும் கடும் எதிர்ப்பு  தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நெய்வேலி என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்து கடலூரில் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக தலைவர் அன்புமணி அழைப்பு விடுத்திருந்தார். 

இதையும் படிக்க : சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் ஈ.வி. கே.எஸ். இளங்கோவன்...!!

பாமகவின் முழு அடைப்பு போராட்டத்திற்கு, உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழர் முன்னணியினர், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் மற்றும் அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி ஆகிய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், கடலூரில் நாளை வழக்கம் போல கடைகள், பேருந்துகள் சேவை இயங்கும் என ஆட்சியர் பாலசுப்ரமணியம் அறிவித்துள்ளார். நாளை பேருந்துகள் வழக்கம் போல இயங்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள ஆட்சியர், இழப்பீடு பெற்ற பிறகு மக்கள் தாமாக முன்வந்து நிலத்தை ஒப்படைத்திருப்பதாகவும் விளக்கம் அளித்திருக்கிறார்.