கடலரிப்பால் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட கடைகள்

வேளாங்கண்ணி கடற்கரையில் ஏற்பட்ட கடலரிப்பால், கடற்கரை ஓரம் இருந்த 50 க்கும் மேற்பட்ட கடைகள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டு சேதமடைந்தன.

கடலரிப்பால் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட கடைகள்

வேளாங்கண்ணி கடற்கரையில் ஏற்பட்ட கடலரிப்பால், கடற்கரை ஓரம் இருந்த 50 க்கும் மேற்பட்ட கடைகள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டு சேதமடைந்தன.

நாகை மாவட்டம் செருதூருக்கும், வேளாங்கண்ணிக்கும் இடையே ஓடும் வெள்ளையாறு  தூர்ந்து போனதன் காரணமாக கடலும், ஆறும் இணையும் முகத்துவாரத்தில் கருங்கல் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. இந்நிலையில் செருதூர் கடற்கரையோரம் தென் பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டதன் காரணமாக வேளாங்கண்ணி வடக்கு பகுதியில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக வேளாங்கண்ணி கடற்கரையோரம் இருந்த 50க்கும் மேற்பட்ட உணவகங்கள், மீன் கடைகள் மற்றும் விளக்குகள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டன.

இதனால் அந்தப் பகுதியில் வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள் பரிதவித்து வருகின்றனர். சேதத்தை தவிர்க்க  வடகரை பகுதிகளில் கருங்கல் தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.