காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும்!  

அவிநாசியில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாலை 5 மணியுடன் கடைகள் அடைக்கப்பட்டன.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும்!   

அவிநாசியில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாலை 5 மணியுடன் கடைகள் அடைக்கப்பட்டன.

கொரோனா மூன்றாவது அலை பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நெறிமுறைகளை அறிவித்திருந்தது. இதையடுத்து திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியில் பால் மற்றும் மருந்து கடை என அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் எனவும், மதுபான கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதேபோல், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பெரிய கடைகள் செயல்படக் கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து நேற்று அவிநாசி மற்றும் சுற்றுப் பகுதிகளில் மாலை 5 மணியுடன் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டன. தொற்று தடுப்பு வழி காட்டு நெறிமுறைகள் முறையாக கடைபிடிக்கப் படுகிறதா என அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.