கல்லடா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு...4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

கல்லடா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு...4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

கல்லடா நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, கொல்லம், பத்தனம்திட்டா உள்ளிட்ட 4 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தென்காசி மாவட்டத்தில் தமிழக - கேரளா எல்லையான தென்மலை பகுதியில் உள்ளது கல்லடா நீர் தேக்கம். சுமார் 380 அடி உயரம் கொண்ட இந்த அணையில் தற்போது 360 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால், அணையிலிருந்து சுமார் 15 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  

அணையில் இருந்து வெளியேறும் 15 ஆயிரம் கன அடி நீரானது கல்லடா நதியின் இரு கரைகளையும் தொட்டபடி ஓடுகிறது. இதனால் கல்லடா நதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கொல்லம், பத்தனம்திட்டா உள்ளிட்ட 4 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கல்லடா நதியின் லுக் அவுட் பாய்ண்டில் நின்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வெள்ளப்பெருக்கினை கண்டு களித்து வருகின்றனர்.