பொங்கல் பண்டிகைக்காக 17,000 சிறப்பு பேருந்துகள்... அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்...

பொங்கல் பண்டிகைக்காக சிரமமின்றியும், எந்தவித இடையூறும் இன்றியும் சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் சென்று வர, 17 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

பொங்கல் பண்டிகைக்காக 17,000 சிறப்பு பேருந்துகள்... அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்...

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட 42- பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் இராஜகண்ணப்பன் துவங்கி வைத்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே நடைபெற்ற நிகழ்ச்சியை சிறுகுறு நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்து துறை அமைச்சர் இராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேருந்துகளை கொடியசைத்து துவங்கி வைத்தனர். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர், பொங்கல் கொண்டாட்டத்திற்காக மக்கள் சிரமமின்றியும், எந்தவித இடையூறு இன்றி சொந்த ஊர்களுக்கு  சென்று வர 17,000- சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கடந்த ஆட்சியின் போது கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட நான்காயிரம் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், போக்குவரத்து துறையில் 6000-பேர் புதியதாக நியமனம் செய்ய உள்ளதாகவும், தற்போது தமிழகம் முழுவதும் 18623-பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் போக்குவரத்து துறையில் பெண்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இலவச சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து துறைக்கு புதிதாக 2212-பேருந்துகள் வாங்குவதற்காக அரசிடம் நிதி கேட்டு உள்ளதாகவும், செங்கல்பட்டு நகரில் போக்குவரத்துக்கு இடையூராக உள்ள போக்குவரத்து பணிமனையை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான நிதி ஒதுக்கி இடதேர்வு வேலைகள் நடந்து வருகிறது. 

செங்கல்பட்டு மக்கள் சென்னைக்கு வேலைக்கு சென்று வருவதற்காக செங்கல்பட்டு பைபாஸ் சாலையில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல்வேறு வழித்தடங்களில் நிறுத்தப்பட்டிருந்த  42-பேருந்துகளை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.