உயிரியல் பூங்காவில் அடுத்தடுத்து ஏழு நெருப்புக்கோழிகள், ஒரு பெண் சிங்கம் உயிரிழப்பு

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அடுத்தடுத்து ஏழு நெருப்புக்கோழிகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரியல் பூங்காவில் அடுத்தடுத்து ஏழு நெருப்புக்கோழிகள், ஒரு பெண் சிங்கம் உயிரிழப்பு

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 35 நெருப்புக் கோழிகள் இருக்கின்றன. கொரோனா பாதிப்பிற்கு பிறகு தற்போது பூங்கா திறக்கப்பட்டு பார்வையாளர்களுக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரண்டு நெருப்புக்கோழிகள் உயிரிழந்தன. இதுதொடர்பாக மருத்துவர்கள் சோதனை நடத்தி வந்த நிலையில், நேற்று அடுத்தடுத்து 7 நெருப்புக் கோழிகள் பராமரிக்கப் படும் இடத்தில் இறந்து கிடந்தன.

இதேபோல் வயது மூப்பு காரணமாக கவிதா என்ற பெண் சிங்கமும் உயிரிழந்தது. பின் பூங்காவிற்கு வந்த மருத்துவ நிபுணர்கள் நெருப்பு கோழிகளுக்கு பிரேத பரிசோதனை செய்து இறப்பிற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.