தூய்மை பணியாளர்களுக்கு தனி ஆணையம் அமைக்கப்படுமா..?  முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்க முடிவு...

தூய்மை பணியாளர்களுக்கு தனி ஆணையம் வேண்டும் என்ற கோரிக்கை முதலமைச்சரிடம் வைக்கப்படும் என்று தேசிய தூய்மை பணியாளர் நல ஆணைய தலைவர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். 

தூய்மை பணியாளர்களுக்கு தனி ஆணையம் அமைக்கப்படுமா..?  முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்க முடிவு...
கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக சென்னை மாநகராட்சியில் ஒப்பந்தம் அடிப்படையில் பணியாற்றி வந்த 12 ஆயிரம் ஊழியர்கள் தங்களை மீண்டும் பணியில் அமர்த்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இந்தநிலையில்  அது குறித்த ஆலோசனை கூட்டம் தேசிய தூய்மை பணியாளர் நல ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் தலைமையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் இணை ஆணையர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு துப்புரவு பணியாளர்கள்  கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை முன் வைத்தனர்.
 
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வெங்கடேசன், பணி நீக்கம் செய்யப்பட்ட 12 ஆயிரம்  ஊழியர்களை மீண்டும் பணியில்  அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை  தூயாமை பணியாளர்கள் முன் வைத்ததாகவும்,  தற்போது அவர்களே ஆட்சியில் உள்ளதால், இந்த ஆணையம் சார்பில் அரசிற்கு தற்போது கோரிக்கை வைக்கிறோம் என்றும் தெரிவித்தார்.