செல்லூர் ராஜூக்கு அடுத்து செந்தில்பாலாஜி... டுவிட்டர் டிரெண்டிங்கில் #அணில்தான்_காரணம் .. கலாய்க்கு நெட்டிசன்கள் 

தமிழகத்தில் மின்வெட்டு அதிகம் ஏற்பட அணிலும் ஒரு வித காரணம் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சமீபத்தில் அளித்த பேட்டியை கிண்டல் செய்து மீம்ஸுகளுக்கும் இரையாகி வருகின்றனர் நெட்டிசன்கள் 

செல்லூர் ராஜூக்கு அடுத்து செந்தில்பாலாஜி... டுவிட்டர் டிரெண்டிங்கில் #அணில்தான்_காரணம் .. கலாய்க்கு நெட்டிசன்கள் 

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தமிழகம் முழுதும் அவ்வபோது மின் வெட்டு ஏற்படுவதாக சமூகதளங்களில் மக்கள் கருத்துகளை கூறி வந்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி புள்ளி விவரங்களை அள்ளி தெளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மின் கம்பிகளின் மீது விழும் நிலையில் இருக்கும் 83 ஆயிரத்து 553 மரக்கிளைகளை அகற்ற வேண்டியுள்ளது என்று மரக்கிளைகளை கூட எண்ணி சொல்லிய அமைச்சர் செந்தில்பாலாஜி, “கடந்த அதிமுக ஆட்சியில் கடந்த ஒன்பது மாதங்களாக மின்சார பராமரிப்புப் பணியே செய்யவில்லை. இதனால் தான்  மின்சார உள்கட்டமைப்பில் பலத்த சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த ஒன்பது மாதங்களில் செய்ய வேண்டிய பராமரிப்புப் பணிகளை ஜூன் 19 ஆம் தேதி முதல் பத்து நாட்களில் சிக்கல்களை சரிசெய்ய மின்வாரியத்தற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

எனவே இந்த பத்து நாட்களில் மின் பராமரிப்பு பணிகளின் போது மின் வெட்டு ஏற்படும். அதுவும் முன் அறிவிப்பு அளித்த பின்னரே மின் வெட்டு ஏற்படும் என்றார்.

இதுமட்டுமல்ல இன்னொரு செய்தியாளர் சந்திப்பில், மின் கம்பிகளில் மீது அணில்கள் ஓடுவதால் கம்பிகள் ஒன்றோடொன்று உரசி அதனாலும் மின் தடை ஏற்படுகிறது என்றும் கூறினார் செந்தில்பாலாஜி.

அமைச்சர்  செந்தில்பாலாஜியின் இந்த ஸ்டேட்மெண்டை சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். கடந்த ஆட்சியில் செல்லூர் ராஜூ செய்த பணிகளை தற்போது செந்தில்பாலாஜி செய்யத் துவங்கிவிட்டார் என்றும் பலர் பதிவிட்டுள்ளனர். டிரெண்டிங்கில் இந்த அணில் விவகாரம் பேசப்பட அரசியல் தலைவர்களும் அணிலை கையிலெடுத்துவிட்டனர்.
 
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று (ஜூலை 22) தனது ட்விட்டரில், “மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி - விஞ்ஞானம்.... விஞ்ஞானம்! சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்? ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ?” என்று கிண்டலடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி சமூகவலைதளங்களில் கிண்டல் செய்து மீம்ஸுகளுக்கும் இரையாகி வருகின்றனர் நெட்டிசன்கள். இதனால் டுவிட்டரில்  #அணில்பாலாஜி #அணில்தான்_காரணம்  என்ற ஹேஸ்டாக்கள் டிரெண்டிங்கில் உள்ளது.