செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்ய ஆளுநரிடம் வலியுறுத்துவோம் - அண்ணாமலை காட்டம்!

செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்ய ஆளுநரிடம் வலியுறுத்துவோம் - அண்ணாமலை காட்டம்!

செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து டிஸ்மிஸ் செய்ய ஆளுநரிடம் வலியுறுத்துவோம் என்று தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்டம் ஈச்சனாரி பகுதியில், பாஜக-வின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா, சி.டி. ரவி மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இதையும் படிக்க : ஊடகங்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி...களமிறங்கும் மாலைமுரசு!

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்கக் கோரி மாவட்டந்தோறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக கூறினார். தமிழகத்தில் கள்ளச்சாராயம் பட்டித்தொட்டி எங்கும் புழக்கத்தில் உள்ளதாகவும், டாஸ்மாக்கில் மது வெள்ளம் போல் ஓடிக் கொண்டிருக்கிறது என்றும் சாடினார்.

மேலும், கள்ளச்சாராய விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று கூறிய அவர், செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து டிஸ்மிஸ் செய்ய ஆளுநரை சந்தித்து 21 ஆம் தேதி மனு அளிக்க உள்ளதகாவும் கூறினார். 

முன்னதாக கள்ளச்சாராய மரணம், மின்தடை உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி, தமிழக அரசுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.