சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் விமர்சனங்களுக்கு மூத்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள் - முதல்வர்

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் விமர்சனங்களுக்கு மூத்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள் - முதல்வர்

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி நிதியை சரியாக பயன்படுத்த வேண்டும் -எம். எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வர் பேசியவை.திமுக எம். எல்.ஏ.க்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று மாலை நடைபெற்றது.

மேலும் படிக்க | ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் வீட்டில்...லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

சட்டமன்றத்தில் நாளை மறுநாள் பட்ஜெட் மீதான விவாதமும்,29 ம் தேதி முதல் மானிய கோரிக்கை விவாதமும் தொடங்க உள்ள நிலையில்,பேரவை விவாதத்தின் போது பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில்
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக எம். எல்.ஏ.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்  எம். எல்.ஏ.க்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆலோசனை வழங்கி உள்ளார்.

கூட்டத்தில் எம். எல்.ஏ.க்கள் மத்தியில் பேசிய  முதல்வர் மு.க ஸ்டாலின் ;-

எதிர்க்கட்சிகள் என்றால் விமர்சிக்க தான் செய்வார்கள் அவையில் உறுப்பினர்கள் அமைதியாக இருக்க வேண்டும்.எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் பட்சத்தில் மூத்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள்.சட்டமன்ற உறுப்பினர் தங்கள் தொகுதி நிதியை சரியாக பயன்படுத்த வேண்டும், சட்டமன்றத்தில் பேசும் போது புகழ்ந்து பேச வேண்டாம் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது