இனி சொந்த வாகனங்களை யாரும் ரேபிடோ ஆப் மூலம் பயன்படுத்தக் கூடாது...போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு...!

இனி சொந்த வாகனங்களை யாரும் ரேபிடோ ஆப் மூலம் பயன்படுத்தக் கூடாது...போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு...!

சென்னை, திருவான்மியூர் அருகே சொந்த வாகனத்தில் ரேபிடோ ஓட்டிய 10 பேருக்கு  வட்டார போக்குவரத்து அலுவலர் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 

தமிழகத்தில் ஆபத்தான முறையில் பாதுகாப்பற்ற நிலையில் சொந்த வாகனங்களை ரேபிடோ ஆப் மூலம் தொடர்ந்து ஒட்டி வந்தனர். அதிக விபத்துகள் மற்றும் பாதுகாப்பு இன்மை காரணமாக சொந்த வாகனங்களை பொதுமக்கள் யாரும் ரேப்பிட்டோ ஆப் மூலம் பயன்படுத்தக் கூடாது என போக்குவரத்து துறை ஆணையர் நிர்மல் ராஜ் ஐஏஎஸ் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டது. 

இதையும் படிக்க : வருமான வரித்துறையினர் அதிரடி...செந்தில் பாலாஜி வீட்டில் திடீர் சோதனை...தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

அதன்படி, திருவான்மியூர் அருகே திடீர் சோதனை மேற்கொண்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள், சொந்த வாகனங்களை ரேபிடோ ஆப் மூலம் பயன்படுத்திய பத்துக்கும் மேற்பட்டோரின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.